Thursday, 20 May 2021

தம்பி ஜாகிர் நலம் பெற துஆ செய்வோம்..

அல்லாஹ்வின் அருளோடு
தம்பி ஜாகிர் நலம் பெற்று
வர,அனைவரும் துஆ செய்வோம்..
~~~~~~~~

MUUAA குழுமத்தில் நாமெல்லாம்
இணைந்த போது,உன் நாணயம்
கண்டு, நாணயத்தை கையாளும்
பொருளாளராய் உனை ஏற்றோம்

உன் 'நா' நயத்தால்,பலரை நீ
அணுகி,அவர்கள் தந்த
பொருளால்,அல்லாஹ்வின்
அருளால், ஆய்வுக்கூடம்
அமைத்திட வழி வகுத்தாய்..

பள்ளியின் கல்வி குழு,தொழும்
பள்ளிகள் பலவற்றில் நிர்வாக
பொறுப்பென, உன் செயலாற்றால்
கண்டு வியந்தவர்கள் பலர்..

'கஜா'வின் போதும், கொரோனா
முதல் அலையின் போதும்,
தன்முனைப்பில்லா உன் நிவாரண,
நிர்மாண பணிகளை கண்டு

போற்றியவர்கள் பலர்..
தான தர்மங்களை ஊருக்கும்
உறவுக்கும் தெரியாமல்,ஏன்
உன் இடது கையிற்கு கூட
தெரியாமல் நீ செய்வாய்..

தம்பியுடையான் படைக்கஞ்சான்
என்பர், உனை போன்ற தம்பியை
பெற்ற உன் அண்ணன்மார்களை
போன்று, நாங்களும் உன்னால்
பெறும் கர்வம் கொண்டோம்..

தம்பி நலம் நலம் பெற்று வா..
நன்மைகள் பல செய்திட, நீ
நலம் பெற்று வா..ஒப்பற்ற
சேவைகள் செய்யும் உன்னொத்த
தன்மைகள் கொண்டோரை 

அல்லாஹ் காத்திடுவான்..
எங்களோடு சேர்த்திடுவான்..
வல்லவனிடம் உனக்காக
இரஞ்சுகின்றோம்...

No comments:

Post a Comment