அவுக்கூர் இம்தாதுல்லாஹ் &
அவரத்தர் பரகத்தின் மகளாருக்கு திருமண வாழ்த்துக்கள்..
~~~~~~~~
மணமகள் ஃபஹ்மிதாவே...
தின வாழ்வில்,நீ சந்திக்கும்
திருப்புமுனையே
மண வாழ்வாகும்..
திருப்புமுனையில் நிற்கும்
நீ,சிறப்பு முனையாய்
அதை ஏற்று,பயணத்தை
இனிதே தொடங்கிடு..
தம்பி சலீமோடு கைகோர்த்து
நீ தொடங்கிடும் பயணம்,இனி
நேர்வழியில் தான்,அகன்ற
தேர்வழியில் தான்..உம் வாழ்வே
இனி பேரொளியில் தான்...
வழியெங்கும் தோரணங்களாய்
எம் வாழ்த்துக்கள் உங்களுக்கு
உற்சாகம் தரும்.பெரியோரின்
துஆக்கள் உங்களை வழிநடத்தும்..
நல்லறம் பேணி,இல்லறத்தில்
நீவீர் சீரோடும் சிறப்போடும் வாழ,
வல்ல அல்லாஹ்விடம்
கையேந்தி பிரார்த்திக்கிறேன்..
No comments:
Post a Comment