தொற்று மீது பற்று வேண்டாமே..!
தொற்று மீது பற்றுக் கொண்ட
கும்பல் ஒன்று ,ஊரடங்கில்
தானடங்காமல்,பேரிடரில்
உலாவரும் நிலை கண்டோம்..
மூனென்றும், ஏழென்றும்
கல்யாண காட்சியென்றும்
உறவினரை காணவென்றும்
இச்சூழலில் கூடாதே.கூடி,
பின் நோய் வந்து சாகாதே..
சுற்றித் திரியும் சிறுசுகளே..
உம் செயலால் நோயை
பற்றிப்பிடிப்பது ,உன்
வீட்டிலுள்ள பெருசுகளே..
அடங்காத உன்னால் தானே
அடங்கினர் பள்ளியின்
கொல்லையில் பலர்.அதை
நீ உணராமல் போனால்
அக்கதியே உனக்கும் ஒருநாள்..
பொன்னாலும் பொருளாலும்
உறவுகளை காத்திட வழியில்லை..
போன பின்பு,அவரை எண்ணி
அழுவதால் பயனேதுமில்லை..
வருமுன் காப்பதே சிறப்பு..
திரியாதே.! உன் குடும்பத்தின்
நல்வாழ்வை நீ மறவாதே..
அந்நியருக்கு உன் வாசலை
திறவாதே!சமூக இடைவெளியால்
உன் நலவாழ்வும் குறையாதே..
நெருக்கத்தால் உறவுகள் அன்று
பலப்பட்டன.தூரத்தால் உறவுகள்
இன்று திடப்படுகின்றன..தூரம்
இருந்து உறவுகளை நாடுவோம்
அவர்தம் புரிதலோடு ,அனைவரின்
உயிர்களையும் பேணுவோம்...
அல்லாஹ்வின் போதனையை
ஏற்று நடப்போம்.அரசின்
சொல்லையும் கேட்டு நடப்போம்..
வைரஸின் வீரியம் குறையும்
நம்பிக்கை கொள்வோம்
அல்லாஹ்வின் மீது.அவனை
விட்டால் வேறு கதி நமக்கேது...
No comments:
Post a Comment