Wednesday, 12 May 2021

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..!

இந்த நோன்பு பெருநாளில்
ஈகை உணர்வு மேலோங்கி,
இன்ப உணர்வு தழைத்தோங்கி
உலகோர் நெஞ்சங்களில்
மனித நேயம் மலரட்டும்..

ஊர் சொல்லிக் கேட்காத இந்த
(கொரோனா )ஆட்கொல்லி,இறை
சொல்லில் அடங்கட்டும்,அதள
பாதாளத்தில் முடங்கட்டும்..

பேரிடரில் நலிவுற்ற நன்மக்கள்
நலம்பெற்று,அவர்தம் நல்வாழ்வு
நிலைப்பெற்று,நெஞ்சங்களில்
இறைப்பற்று நிலைகட்டும்..

பாசங்களை நேசங்களை 
பகிரும் பெருநாளில்,நமது
சுவாசங்களின் அவசியத்தை
கருத்தில் கொள்வோம்..

கூடாதீர் என்னும் கோஷத்தை
கேளாதீர் என்றுரைக்கும்
நண்பர்களே..உயிர் மூச்சுக்கு
உத்திரவாதம் நீவிர் தருவீரோ..

காசை கொடுத்து மூச்சை
வாங்கும் கதி வேண்டாம்..
தொற்று நோயின் நிலை
அறிந்து,சமூக இடைவெளி
பேணிடும் மதியே வேண்டும்..

இணையில்லா வல்ல ரஹ்மான்
நம்மோடு துணை இருப்பான்..
அனைவருக்கும் இதயம் கனிந்த
ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment