Monday, 19 April 2021

எங்கள் ஆருயிர் அண்ணன்(H.R) நூர் அவர்களின் மச்சான், நண்பன் நூர் அகமதின் தந்தை, பேபி ரசீது அவர்களின் மஃபிரத்திற்கு துஆ செய்வோம்..

 'பேபி'என்ற சொல்,அன்னாரின்
பெயரோடு ஒட்டி வரும்.எனக்கு
ஏனோ புரியவில்லை அன்று..

நண்பன் நூர் அகமதின் வீட்டிற்கு
நூறு முறை சென்றதுண்டு..
அவன் தந்தையை பலமுறை
கண்டதுண்டு. பேசியதுண்டு..
அப்போது தான் புரிந்தது, அப்பெயர்
காரணம்..வளர்ந்த குழந்தை அவர்..

முகம் எல்லாம்  சிரிப்போடும்,
உளமெல்லாம்  பரிவோடும்
குழந்தை மனத்தோடும்
வலம் வந்த உத்தமர்..

அவர் கடிந்து பேசி நான் கேட்டதில்லை.
அதிர்ந்து நடந்தும் பார்த்ததில்லை..
எளிமையாய் இருந்தவர்,வாழ்வை
இலகுவாய் கடந்தார் இன்று..

இறைவா..பால் மனம் கொண்ட
இவரை,நல்லடியார்கள் கூட்டத்தில்
சேர்த்து,சுவனத்தில் நற்பதவி
தந்திட வேண்டும் என்று உன்னிடம்
கையேந்தி பிரார்த்திக்கின்றோம்

அன்னாரின் பிரிவால்,ஆற்றொணா
துயரத்தில் வாடும்,அவரது
குடும்பத்தார்கள் அனைவருக்கும்
எனது ஆழ்ந்த இரங்கல்..

No comments:

Post a Comment