சயிரத்தர்,சிலிங்கி குடும்பத்தின் நிழல் தந்த பெரும் ஆலமரம் இன்று சாய்ந்தது.. அதன் சுவாசம் இன்று ஓய்ந்தது...
_____________________________________
அன்பால் உற்றார் உறவுகளின்
இதயங்களை ஆட்சி செய்த
ஹஜ்ஜா கதீஜா எனும் எங்கள்
செல்லாட்சி,அல்லாஹ்வின்
அழைப்பை ஏற்றார் இன்று.
மண்ணின் மேல் இனி செய்ய
ஒன்றும் இல்லை என்று,இறை
ஆணையை ஏற்று ,மண்ணின்
கீழ் சென்று விட்டீர்களோ..
பொருளீட்ட சென்ற கணவனும்,
தலையெடுப்பான் என்றெண்ணிய
தனயனும்,கடல் கடந்து,கரைந்து போனபோது,
பெண் பிள்ளைகள் இரண்டை நினைத்து,
உறைந்து போகாமல்,மீண்டெழுந்த
ஃபீனிக்ஸ் பறவை நீங்கள்..
குடும்பத்தில் இறப்பானாலும்
புது பிறப்பானாலும்,கல்யாணம்
காட்சி என்றாலும் யோசனைக்கு
அணுகும் ஞானபீடம் நீங்கள் தானே.
உங்களுக்காக துஆ செய்திட
குடும்பத்தில் ஆயிரம் பேருண்டு..
ஆனால் உங்கள் இடத்தை நிரப்ப
இனி குடும்பத்தில் யாருண்டு..
சோகம் நெஞ்சை அடைத்திட
கண்ணில் வடியும் நீரை
துடைத்துக் கொண்டு,எனது
மருமகள்கள் ரலியா,பௌஜியா,
செல்லப்பா,நாச்சியக்கா,ரீனா,
ரிஃபி, மற்றும் ஃபைரோஸ்
ஆகியோருக்கு எனது ஆழ்ந்த
இரங்கலை சமர்ப்பிக்கிறேன்.
இழப்பை தாங்கும்
சக்தியை அல்லாஹ் உங்களுக்கு
தந்திடுவானாக...ஆமீன்..!
வல்ல இறைவா.! தொழுகையும்,
திருமறையை ஒதுதலும்,ரசூலின்
வழிமுறையை பேணுதலுமே,
தனது வாழ்வின் குறிக்கோளாய் கொண்ட
இந்த புண்ணியவதியை, நீ ஏற்று,
சுவனத்தில் நற்பதவி தந்திட
வேண்டும் என்று, உன்னிடம்
கையேந்தி பிரார்த்திக்கிறேன்.
No comments:
Post a Comment