சீச்சீ..இந்த பழம் புளிக்கும்
எனச் சொன்னதாம்,எட்டாத
கனியை கண்ட நரியொன்று..
கிட்டாத சீட்டுக்கு,திட்டாத
வார்த்தை இல்லை,பட்டா
தான் தெரியும்,அவர்கள்
மோதுவது சிங்கத்திடம் என்று..
யானையின் பின்முதுகில்
வந்தமர்ந்த சிறுகுருவி,
திரும்பிய யானையிடம்
'பாரமா' எனக்கேட்டதாம்.கதை
கேட்டு நகைத்தவர் உண்டு..
தன் பலமறியாத குருவியின்
கதை போன்று,புதுக்கதை
ஒன்று ஆரூர் தொகுதியிலே..
தேர்தல் களத்தில்,ஆழம்
தெரியாமால்,சூழல் புரியாமல்
கட்சியொன்று 'விசில்' அடிக்க
யாரும் திரும்பவில்லையாம்..
நம் மக்களே,நம்மிடம்,பகைமை
உண்டாக்கும் வினோதம் கண்டு
யாருமே திரும்பவில்லையாம்..
சீட்டுக்காக பகைத்து,குரோதத்தை
மனதில் விதைத்து,குக்கரில் மாட்டி
சீட்டி(விசில்) அடிக்கும் நண்பர்களே..
கல்லடியை விட, சொல்லடியின்
காயங்கள் ஆறிட நாளாகும்..
ஆறுங்கள்.. மனம் ஆறுங்கள்..
ஆறாம் தேதி,ஆரூரும் போகும்..
இது ஆருடம் அல்ல,தேரோடும்
ஊரின் கள நிலவரம்..
நம்மூராரின் உள நிலவரம்...
கிட்டிய ஆறும் போகலாம்..
மனம் ஆறுங்கள்..
மனம் தேறுங்கள்..
திருவாரூர் தொகுதி
சாமானியன்...
No comments:
Post a Comment