Monday, 29 March 2021

ஆரூரின் அரிமா,ஆடிட்டர் மிஸ்கீன் அவர்களின் மஃஹ்பிரத்திற்கு துஆ செய்வோம்..

அரிதாய் வந்தவர்,கல்வியால்
பெரிதாய் உயர்ந்தவர்,காண்பவர்
நெஞ்சை துரிதாய் கவர்ந்தவர்..

பட்டய கிளப்பிய இந்த
பட்டய கணக்காளர்,அறுபது
ஆண்டுகள் தன் தொழிலில்
வெற்றிக் கொடி நாட்டியவர்..

தள்ளாத வயதென்று,ஓரறையில்
முடங்காமல்,கல்வி தாகம்
அடங்காமல்,கல்லூரி ஒன்றை
திறம்பட நடத்திய கல்விதந்தை..

பன்னூறு நூற்களை படித்து,
வணிகவியலில்,தொன்னூறு
வயதில்,முனைவர் பட்டம் பெற்று
அறிவு தேடலுக்கு வயது ஓரு
வரம்பில்லை என்றவர்...

வண்டாம்பாளையத்தில்,பெரும்
தொண்டாம், கண் மருத்துவமனை
நிறுவி,ஏழைகள்  பலருக்கு,
கண்ணொளி தந்தவர்..

தன் அனுபவ அறிவை,மாணவ
சமூகத்திற்கு கடத்திட,என்றும்
துடிப்பாய் இருந்தவர்..  
பண்புடமை காத்து, ஈகை பல
செய்து, வாகை சூடிய இந்த

வித்தகரை படிப்போருக்கு
அதில் படிப்பினை உண்டு..
பூவுடல் மண்ணிற்குள் போனாலும்
உன்னால் கல்விபெற்றவரின்
நெஞ்சிற்குள்,நிழலாடும்,உன்
நினைவுகள் என்றென்றும்..

வல்ல ரஹ்மானே..உன்பால்
வந்த இந்த கணக்காளரை..
இவர் செய்த நன்மைகளை
கூட்டி,பாவமிருப்பின் கழித்து,
பொறுத்து,சுவனத்தில் இவருக்கு
நீ நற்பதவி தந்திட
மனமுருகி வேண்டுகின்றோம்..

No comments:

Post a Comment