கப்புக்காலர் அப்துலுக்கு
என் இதயத்தின் அஞ்சலி...
~~~~~~~
கள்ளம் கபடு இல்லாத
உள்ளம் கவர்ந்த உத்தமன்
சத்தமாய் பேசினாலும்
சத்தியமே பேசுவான்...
கால்பந்து,கைப்பந்து ஆடும்
களங்களில்,அடித்து ஆடினாலும்
வாழ்வின் தடங்களில்,நடித்து
ஆடத்தெரியாதவன் இவன்..
காட்டாற்று வெள்ளம் இவன்,
மடைமாற்றம் செய்திருந்தால்
சிகரத்தை தொட்டிருப்பான்..
வாழ்வை ரசிக்க தெரிந்த
இவனை,சோகங்கள்
என்றுமே தொட்டதில்லை..
பலர் பயணிக்க கடவு
சீட்டை எடுத்து தந்தவன்
இன்று நற்குணம் என்ற
கடவுச்சீட்டோடு,தன் இறுதி
பயணத்தை தொடங்கிவிட்டான்..
அவனின் இறை நேசமும்,
சத்திய வாக்கும்,நேர்மையும்,
இமிகிரேஷனை கடந்து
டெஸ்டினேஷனை அடைய
அவனுக்கு உதவட்டும்..
உதவும் எண்ணம் கொண்ட
அவனுக்கு,சுவர்க்கத்தின்
கதவும் திறக்கட்டும்....
வல்ல ரஹ்மானே இவனின்
பாவங்களை மன்னித்து
உன்பால் ஏற்றுக்கொள்வாயாக.
No comments:
Post a Comment