சடையன் கமால் பாட்சா &
A.P.N.நத்தர் கனி அவர்களின்
இல்லத் திருமண விழா..
நாள்: 16.03.2021-
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்..!
~~~~~~~
கல்யாண வாழ்வில், இன்று
சிறகடித்து பறக்க இருக்கும்
ஃபரா எனும் வெண்புறாவையும்
ஷேய்க் கனி எனும் அதன்
ஜோடிப்புறாவையும்,மனதார
நான் வாழ்த்துகிறேன்..!
நத்தர்கனி அண்ணா பெற்ற
மூன்றாம் சிங்கமே.! நேற்றைய
ன்னா நிகழ்வில்,உன்னில்
ஒரு கலைஞனை கண்டேன்..
சிங்கப்பெண்ணை கைபிடிக்கும்
இளைஞனே.!உன்னவளோடு
பல்லாண்டுகள் நீ வாழ்ந்திட
படைத்தவனிடம் வேண்டுகிறேன்..
என் அன்பு பேத்தி ஃபராவே..!
இல்லறத்தில்,ஷேய்க்கனியோடு
இணையும் உன் வாழ்வு,முக்கனிப்
போல தித்திக்கட்டும்.திக்கெட்டும்,
நல்லறத்தை பலருக்கு அது
கற்பிக்கட்டும்.அதற்கு எல்லாம்
வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக..
பட்டயக்கணக்கில் பட்டம் பெற்ற
நீ,பொறியல் வல்லுனரோடு
கைகோர்க்கும் இந்நன்னாளில்
மகிழ்ந்து,நெகிழ்ந்து நிற்கும்,
மருமகள் தஹ்ஸீனுக்கும்,
அருமை தம்பி கமாலுக்கும்,
என் பேரன் நிசாத்திற்கும்,
மணமகனின் தந்தை, அன்பு
சகோதரர் நத்தர் கனிக்கும்,
அவர்தம் குடும்பத்தாருக்கும்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment