Sunday, 7 March 2021

மகளிர் தின வாழ்த்துகள்...

 மகளிர் தின வாழ்த்துகள்...
~~~~~~~

பிள்ளைகளை கருவில் சுமந்தாய்,
பெற்ற பின்,உன்னோடும்,உன்
கண்ணோடும் சுமந்தாய்..

பெற்ற தாய் தந்தையரையும்
உன் கை பிடித்த கணவனையும்
உன்னோடு பிறந்தவர்களையும்
உன் இதயத்தில் சுமந்தாய்..

உற்றார் உறவுகளை உனது
நினைவுகளில் சுமந்தாய்..
பிள்ளைகளின் எதிர்காலத்தை
உன் கனவுகளில் சுமந்தாய்.. 

குடும்பதின் பாரத்தையோ
உன் தலையில் சுமந்தாய்...

நீ சமைக்க மட்டும் பிறந்தவள்
அல்ல,குடும்பத்தின் பாரத்தை
சுமக்க பிறந்தவள்..சுணக்கம் 
இல்லை உனக்கு..நீயின்றி
சுவர்க்கம் இல்லை எமக்கு..

குடும்பத்தை காக்கும் இமையாய்
ஆனாய்..எம் பார்வையில் நீ
இமையமாய் ஆனாய்...

அன்னையருக்கும்...
சகோதரிகளுக்கும்..
தோழியருக்கும்..என்
மகளிர் தின வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment