Monday, 30 November 2020

உழவர்களுக்கு வலு சேர்ப்போம்.



இக்கட்டிடத்தில் களைகளும்
உண்டு,பலன் தரும் தழைகளும் 
உண்டு,விஷச்செடிகளும் உண்டு. 
நிழல் தரும் தருக்களும் உண்டு..

நேர்கொண்ட பார்வை கொண்ட
உழவனவன்,தன் ஏர் கொண்டு தேவையிலா 
களைகளை கலைய மேற்கொண்ட முயற்சியா இது..?

(படத்தை பார்க்கவும்)

உணவால் உயிர் காப்பவனின்
உணர்விற்கு மதிப்பில்லையா?? 
ஷங்பரிவாருக்கு விவசாய 
சங்கங்கள் என்றால்  
சகிப்பில்லையா?

வேகாத வெயிலில்,குருதி 
கொட்டி உழைப்பவனை,நீ 
வருத்தினால்,அவன் மன வலியும் 
ஆறாது.உன் கலயத்தில் 
அரிசிகளும் வேகாது...

தலைநகரை சூழ்ந்துள்ள
கலப்பை பிடிப்பவர்களின் 
களைப்பை போக்கிட,நாமும் 
பின்னின்று,அவர்களின் 
குரலுக்கு வலு சேர்ப்போம்..

No comments:

Post a Comment