பரந்த உள்ளம் கொண்ட
சிறந்த ஜமாலியன் அன்பு
தம்பி நியாஜிற்கு வாழ்த்துக்கள்.
~~~~~~~~~
உள்ளூரில் இருந்து
கல்லூரிக்கு ,மலைக்கோட்டை
மாநகர் போன மாணாக்கர் பலர்,
சுவாசிக்க காஜாமலை, ரசிக்க மலைக்கோட்டை,
பங்சன் என்றால் ஜங்சன்,
உல்லாச உலாவர சிங்காரதோப்பு,
கண்ணுக்கு விருந்தாய்,
இடை காட்டி நடை
போடும் செப்புச்சிலைகள்..
இடையில் கலையரங்கம்
அப்பப்ப சோனா,மீனா..
மெஸ்ஸு மிஸ்ஸானால்
ராதாவில் டி ஃபன் என்று
மகிழ்ந்து திரிந்தனர்..
வாலிபத்தின் வனப்போடு
துடிப்போடு,நீயும் கூட
திலைத்திருப்பாய்..ஆனால்
படிப்பில் கருத்தாய்,கடிதாய்
பெரிதாய் உழைத்திருப்பாய்..
அதனால் தான் திருச்சி
டோல்கேட்டை கடந்து
ராஜபாட்டையில் நடந்து
மலேயா சென்று கோலாகலமாய்
KL ல் கோலோச்சுகிறாய்..
சிறந்த ஜமாலியன் பட்டம்
பெற்ற நீ,இன்று போல
என்றும் சாமனியனுக்கு
சேவை செய்திட,வல்ல
ரஹ்மான் அருள் புரிவானாக..
நீ சுவைத்த குஸ்காவை விட
சுவையான ஜமாலின்
உன்னத நாட்களை போல
உன் வரும் காலமும் சுவையாய்
அமைந்திட வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment