இறைவா,நீ குறைவாய்
ஏதும் செய்வதில்லை..
மறைவாய் செய்தாலும்
நிறைவாய் செய்வாய்..
துன்பம் வரும்போது,நாங்கள்
தஞ்சம் கொள்ளும் மஞ்சம் நீ...
வஞ்சம் இல்லா உன் அன்பை
கொஞ்சம் கூட மறுக்காமல்
முழுதாய்,பெரிதாய் தரும்
கருணையாளனே..
எங்கள் ஆருயிர் தம்பி,அண்ணன்
தாவூதின் திருமகன்,சாலப்பை இப்ராஹிம்,
உன்னை நம்பி மருத்துவமனையில்,
உன்னை நம்பி மருத்துவமனையில்,
சுவாச கருவியோடு போராட,
பாச உணர்வோடு உன்னிடம்
மண்டியிட்டு வேண்டுகிறோம்..
உயிர்காப்பவனே! தம்பியவன்
தலை தூக்கிட,கருணை காட்டி
எம் துவாக்களை ஏற்று,பிள்ளை
அவன் குணம் பெற,நலம் பெற
ரப்புல் ஆலமீனே அருள்புரிவாயா..!!
No comments:
Post a Comment