இளமையில் பொறுப்பற்ற
விளையாட்டுப்பித்தன் நான்..
அப்படித்தானே நம்மில் பலர்..
சூரியன் சாய்ந்தாலும்,ஊரே ஓய்ந்தாலும்,
பொழுதெல்லாம் விளையாட்டுத்திடலில்,விழுந்து
பொழுதெல்லாம் விளையாட்டுத்திடலில்,விழுந்து
எழுந்த காயங்கள் உடலில்..
ரத்த திமிர்,காயத்திற்கு கட்டுப்
போட மறுத்த காலம்,காட்டாற்று
வெள்ளம் போல,யாருக்கும்
கட்டுப்பட மறுத்த காலம்..
மடைப்போல அடைத்து,என்னை
தடம் மாற்றி,இடம் மாற்றி,
புடம் போட்டது என் அண்ணன்..
கடிந்து திருத்தியதால்,அன்று
எதிரியாய் தெரிந்தவன்,இன்று
என் தந்தையாய் தெரிகிறான்...!
அன்பு காட்ட அன்னை,நல்வழி
காட்ட தந்தை,பாதுகாக்க
அண்ணன்,இம்மூன்றும்
பெற்றவருக்கு, வேறென்ன
வேண்டும் வாழ்வில்..!
முதல் இரண்டும் போனதால்
முதல் இழந்து போனேன்..
முதலில் பிறந்த உன்னை
காணும்போது,எந்தையாய்
நான் உணர்ந்தேன்..
என் நல்வாழ்விற்கு,பல
கனவுகளை சுமந்தவன் நீ..
எனை பார்க்கும் போது பரவசம்
உனக்கு,பரமசுகம் எனக்கு..
இம்மண்ணில் நானிருக்கும்
வரை,என்னோடு நீ இருக்க
வேண்டும்..வாழ்க பல்லாண்டு..!
No comments:
Post a Comment