ராக தேவனின் வரங்களை பெற்ற
ஏழு சுரங்களை தாமரைப்பாக்க
மரங்கள் நிழல் தர,எத்தனை
கரங்கள் துயரோடு சுமந்தன..
ஏழு சுரங்களை தாமரைப்பாக்க
மரங்கள் நிழல் தர,எத்தனை
கரங்கள் துயரோடு சுமந்தன..
சரீரம் மண்ணில் மறைந்தாலும்
உனது சாரீரம் விண்ணில் சாகா
வரம் பெற்று உலா வரும்...
ஊடலுக்கும்,கூடலுக்கும்
காதலுக்கும்,சாதலுக்கும்
பக்திக்கும்,சக்திக்கும் உன்
பாடலே எங்கள் துணை...
வாடாத ரோஜாப்பூவே..இளைய
நிலாவின் ஒளியில் ஓய்வெடு...
இனி நீ பாடும் மௌனராகம் எம்
இதயங்களை கசியவைக்கும்...
No comments:
Post a Comment