காலம்..ஒரு நாள் பூமாரி பொழியும்..
பொற்காலம் என்று மனமோ
மகிழ்வில் பூபாளம் பாடும்..ஒரு நாள்
அதுவும் முற்காலம் ஆகும்..
தற்காலம் சிலசமயம் கற்களை
வீசும் கற்காலம் ஆகலாம்.தற்சமய
வேகாளம் கூட தற்காலிகமாகலாம்..
பிற்காலம் வரலாம்,வெப்பத்தை
தணிக்கும் பனிப்பொழிவை
தரலாம்.ஒவ்வொரு துன்பத்திற்கு
பின்பும்,ஏதோ ஒரு மகிழ்ச்சி
ஒளிந்து தானே இருக்கின்றது..
'எல்லாம் மாறும்'நிச்சயம் மாறும்...
நம்பிக்கை கொண்டோருக்கு
வலிகள் இல்லை..வழிகள் உண்டு....
No comments:
Post a Comment