Friday, 26 June 2020

கே யீ 'வீட்டு திண்ணை



கே யீ 'வீட்டு திண்ணை எனும்
பண்ணையில் பாசமெனும்
பாசன வடிகாலில் நீர்ப்பெற்று
பெயர் பெற்று வளர்ந்த கன்றுகள்..

தோகா,சியாட்டில்,ஹாங்காங் 
என இன்று கிளைகள விரித்து,விரிந்து, 
பரந்து பெரும் விருச்சங்களாய் நிற்கின்றன...

விசால மனம் கொண்ட இந்த
விருச்சங்கள்,பலருக்கு நிழல் 
தரும்,பழம் தரும்,பலம் தரும்,
பலன் தரும், ஒரு சிலருக்கு
மட்டும் பயம் தரும்..

அன்றலர்ந்த மலராய் காட்சி
தரும் இவர்கள்,பொருளாதார
தேடலுக்கு புலம்பெயர்ந்த போதும் 
நலம் நாட தவறியதில்லை..

நட்பிற்கு இலக்கணமாய் வாழும்
தலைக்கனம் இல்லா இவர்கள்
நகைச்சுவையை அறுசுவையாய் 
படைத்து பரிமாறுபவர்கள்..

காலங்கள் ஓடினாலும்
வானிலையும்,சூழ்நிலையும்  மாறினாலும்,இவர்களின்
நேசமும்,பாசமும் மாறாது..

No comments:

Post a Comment