Sunday, 21 June 2020

தந்தையர் தினத்தன்று என் தந்தை அவரத்தர் அப்துல் வாஹீது அவர்களுக்கு ஒரு மடல்..



உண்ண தந்தவன்.. எனக்காக
உன்னையே தந்தவன்..

நேர்மைக்கு வலிமை உண்டு 
எளிமைக்கு உயர்வு உண்டு
என்பதை நானறிய வாழ்ந்து
உன் வலியை மறைத்து எனக்கு
நல் வழியை காட்டியவன்...

கஷ்டங்கள்,நஷ்டங்கள்,துன்ப
துயரங்களின் உயரங்களை
அதன் சிகரங்களை கண்டு
அதை சிரித்தே கடந்தவன்..

அன்பை தந்தாய்,கனிவை
தந்தாய்,அறிவை தந்தாய்
எல்லாம் தந்த எந்தை நீ
என் தாய் நீ.கருவை 
சுமக்காத அன்னை நீ .

நான் படித்து அறித்ததை விட
உன்னை படித்து அறிந்ததே
அதிகம்.என் புத்தகமே
பொக்கிஷமே..நன்றி..

நீ வாழ்ந்த போது நன்றி 
சொல்ல தெரியவில்லை
கோபுரத்தின் உயரம் 
அன்று புரியவில்லை.
மன்னித்துவிடுங்கள்...

No comments:

Post a Comment