இவ்விளையாட்டை காலப்
போக்கில் மறந்து போனோம்
அலட்சியமாய் கடந்து போனோம்..
உடலால் களைத்துப் போனோம்
மனதால் கனத்துப் போனோம்
மதியால் சிறுத்துப் போனோம்..
தொழில்நுட்பம் வாழ்க்கை
வசதிகளை பெருக்கியது
கிராம வாழ்வை சுருக்கியது
நவீனமயத்தால் கூட்டு குடும்பம்
சுருங்கியது பாச உணர்வும்
பெருமளவு மழுங்கியது..
உறவுகளோடு அந்நியப்பட்டோம்
மேற்குலக கலாச்சாரத்தில் நாம்
விரும்பியே அடிமைப்பட்டோம்..
காத்தாடியையும்,தெருவில்
வரும் கூத்தாடியையும்
இன்று காணவில்லை.
ஐம்பதை கடந்தோருக்கு
பழமையை மறக்க முடியும்
என்று ஏனோ தோணவில்லை..
No comments:
Post a Comment