Tuesday, 9 June 2020

பிறந்தநாள் வாழ்த்துக்கள்...



அன்பு நண்பன் காதர்மீரா ஷர்புதீனுக்கு
அறுவதாவது பிறந்தநாள்
வாழ்த்துக்கள்...
~~~~~~~

ஜூன்பத்தில் பிறந்த நீ
ஊர் பற்றில் சிறந்த நீ
ஆறு பத்து அகவை முடித்து
சதமடிக்க பயணிக்கிறாய்..

ஊருக்கு நீ உழைப்பதும்
கண்டு நாங்கள் மலைப்பதும் 
வாடிக்கை தான்.உனக்கோ
வாழ்க்கையே ஒரு வேடிக்கை தான்.

கவனம் என்று மருத்துவரும்,உன்
மனையாளும் சொன்னாலும்
எந்நாளும் உன்னாலும் ஓடாமல்
ஒருநாளும் இருக்கமுடியாது..

ஏதேனும் எங்களுக்கு பிரச்சனை 
என்றால் எம் சிந்தையில் தோன்றும்
சித்திரம் நீ..பத்திரம் என்று
பாய்ந்து வருவாய்..பிரச்சனைக்கே
உன்னால் தான் பிரச்னையாம்...

பிறருருக்கு செய்யும் சேவையில்
சளைக்கவும் மாட்டாய்,என்றும்
களைக்கவும் மாட்டாய்..ஆமாம்
அதுதான் இறைவன் உனக்கு 
தந்த பலம்..நீயோ எங்களுக்கு
வல்ல ரஹ்மான் தந்த வரம்..

அறவழியில் நின்று பண்போடு
வாழும் அன்பு நண்பன் ஷர்புதீனே..
நீ அளவிலா இன்பத்தோடு, நிகரிலா புகழோடு,ஆரோக்கியத்தோடு 
நீடுழி வாழ்ந்திட கையேந்தி
இறைவனிடம் வேண்டுகிறேன்..

No comments:

Post a Comment