Thursday, 28 May 2020

சோக யாத்திரை..



சோக யாத்திரை..
~~~~~~~
ஊரடங்க சொன்னவர்கள் 
புலம்பெயர்ந்த தொழிலாளியின்
பசியை ஏனடங்க சொல்லவில்லை..

பசியடக்க வழியின்றி 
பயணத்தை கால்நடையாய் 
தொடங்கிவிட்டான்..

மத்திய,மாநில அரசுகளும்
கால்நடையாய் தான்
அவனை நடத்தின..

நடப்பவர்கள் எல்லோரும்
நாடட்டவர்கள் இல்லை.. 
நாதியற்றவர்கள் இல்லை..

நடக்க விட்டவர்கள் தான் குறுதி
ஓடும் நாடியற்றவர்கள்...

கையாலாகாத அரசை 
நினைத்து நம் தேசிய 
நெடுஞ்சாலையே கொதித்தது..

நடந்தவனின் பாதங்களும் 
தேச மக்களின் ரத்தமும்
உஷ்ணத்தால் கொப்பளித்தது..

பாதணி இல்லா இவர்களின்
பாதயாத்திரை பல இடங்களில்
சோக யாத்திரயாயின..

இன்று கால் கடுக்க நடப்பவர்கள் 
தேசத்தில் மாற்றங்களை
நடத்தி காட்டுவார்களா?

புலம்பெயர்ந்தவர்களின் பலம்
யாதென காட்டுவார்களா?
நல்லதே நடக்கும் ..நம்புவோம்..

No comments:

Post a Comment