நோன்பு பெருநாள் ஹஜ்ஜு
பெருநாள் என இரண்டே
பெருநாள் தானே இஸ்லாத்தில்...
ஆனால் இந்த ஈகை பெருநாளை
இன்று ஒரு சாரார் கொண்டாட,
நாளை ஒரு சாரருக்கு பெருநாளாம்..
போரூரில் பிறை கண்டவர் அதை
பறை சாற்றிட நெடுநேரம் எடுத்துக்
கொண்டதால் வந்த குழப்பமா..?
இல்லை எங்கள் வழி தனி வழி
என்று காட்டிடும் தன்முனைப்பா?
ஆண்டுதோறும் வரும் வழக்கமான குழப்பம் தான்
என்றாலும் அதை
என்றாலும் அதை
கடந்து செல்ல மனம் தயங்குகிறது..
சாந்தியையும் சமாதானத்தையும்
போதிக்கும் இஸ்லாம்..இன்று
வேற்றுமையில் ஒற்றுமை
காணும் நிலையில் நாம்..
இன்று கொண்டாடுவோருக்கும்
நாளை கொண்டாட இருப்போருக்கும்
என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment