Monday, 17 February 2020

காவிகள் வழியில் கண்மூடி பயணிக்கும் எடப்பாடியே.


காவிகள் வழியில் கண்மூடி
பயணிக்கும் எடப்பாடியே.. 
அறவழியில் போராடினால் 
அராஜக  அடிதடியா??

வண்ணாரப்பேட்டையிலே
முஸ்லீம்கள் சிந்திய செந்நீருக்கு 
வருந்தி கண்ணீர் வடிக்கும்
நாள் வரும் பன்னீருக்கு(ஓபிஸ்)

குண்டாந்தடி கொண்டு 
கொன்றொழிக்க முற்படும்  
காக்கிகளே...உம்மால் 
கொந்தளிக்கும் இன்றைய 
தமிழகத்தை கண்டீரா??

திக்கெட்டும் ஒலிக்கும் 
எம் உரிமை குரலை 
நெறிக்க முயன்றால்
தெறிக்க விடுவோம்..
வன்முறையால் அல்ல
சாத்வீக நன்முறையால்.. 

கூத்தா'நல்லூரில்' ஒரு
ஷாஹின் பாக்.ஒன்றுகூடி
வென்று காட்டுவோம் 
இம்மண்ணின் மீதான
நம் உரிமையை..வாழ்க
எம் தாய் திருநாடு..

No comments:

Post a Comment