Wednesday, 1 January 2020

புத்தாண்டு வாழ்த்துக்கள்.!


இருபது விழுக்காடு உள்ளவர் 
இருப்பை கேள்விக்குறியாக்கி 
பத்தொன்பது பதற்றத்தோடு
அவசரமாய் நகர்ந்து விட்டது 
இருபதும் பிறந்து விட்டது..

குடியுரிமை பதிவேட்டால்
என்னுரிமை பறிபோகுமா?
என்றெழுந்த அச்சத்தால்
சிறுபான்மையினர்  குரல்
முரசு போல் ஓங்கி ஒலித்திட  
அரசு ஆடித்தான் போனது..

உறவோடும் உரிமையோடும் 
அன்போடும் நம்மோடு என்றும் 
பயணிக்கும் பெரும்பான்மை 
சமூகம்,ஆதரவாய் கைக்கோர்க்க
நல்லிணக்கம் நம்பிக்கை தந்தது.. 

மதங்களை கடந்த இந்த 
பாசத்தை,நேசத்தை தேசம் 
உணர்ந்திட, வழிவகுத்த 
மோடி-ஷா கூட்டணிக்கு 
நாம் நன்றி சொல்வோம்..

மண்ணறைக்கு செல்லும் வரை
இந்தியனாய்,தமிழனாய்,என்றும் 
இஸ்லாமியனாய் நம் உரிமையை 
நிலைநாட்டுவோம் என்று
உறுதிபூண்டு, புதிய ஆண்டை
வீர உணர்வோடு வரவேற்போம்..

எல்லா மக்களுக்கும்
நலம் பயக்கும் ஆண்டாய் 
இவ்வாண்டு அமையட்டும்.. 
வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment