வஹாபியோ இல்லை சஹாபியோ...
எல்லோருமே ஏகத்துவ பாதையை
ஏற்றவர்கள் தானே..
சுன்னத் ஜமாஅத்,தவ்ஹீது
ஜமாத்,இன்னும் எத்தனை
ஜமாத்துக்கள்...வேற்றுமையால்
இழந்தது சமுதாய ஒற்றுமையை..
நம் ஷரியத்தில் ஆட்சியாளன்
கைவைக்க யார் காரணம் ??
நாம் பிளவுபட்டு பிரிந்ததால்
பலமிழந்தோம் புரிந்ததா??
முத்தலாக் அல்ல,அது எத்தலாக்
ஆனாலும்,தவிர்க்க தான் நம்மை
படைத்தவன் சொன்னான்.நாமோ
அதை மறந்தோம்.'NAMO' சட்டம்
திருத்திய பின் கண் திறந்தோம்...
மாட்டுக்கறி உண்டான் என்றால்
உயிர் எடுப்பர், பாபரி மஸ்ஜித்
என்றால் போர் தொடுப்பர்,விவாக
விலக்கு என்றால் அதற்கும் இந்த
காவிகள் குரல் கொடுப்பர்.
பாபரி மஸ்ஜித் மண்ணை விட்டு
போனாலும்,பொது உரிமையியல்
சட்டம் உயிர் பெற்று வந்தாலும்
கவலை இல்லை.தொழுகையில்
விரலை ஆட்டலாமா?வேண்டாமா?
தலையாய பிரச்னை இது தானே..
நம்மை நல்வழி படுத்த புனித
வேதமுண்டு.ஆனால் போதமில்லை
நமக்கு.எண்ணற்ற சேதம் கண்டும்
போதவில்லை நமக்கு..
வாருங்கள் தொப்பி போடலாமா?
வேண்டாமா ?என்ற விவாதத்தில்
முற்றிலும் மூழ்கி முத்தெடுப்போம்...
No comments:
Post a Comment