Monday, 11 November 2019

வலி மறப்போம்...!

வலி மறப்போம்...!
**********
நில பிரச்சனை இல்லை இது
இஸ்லாமியரின் உள(ப்)பிரச்சனை..
களப்பிரச்சனை ஆக்கிடாமல்
தடுக்கத்தான் இந்த தீர்ப்பாம்...

ஒன்னாம் வகுப்பு பிள்ளையின்
உணவை, அடித்து உதைத்து 
பிடுங்கினானாம் பத்தாம் 
வகுப்பு மாணவன்..

உணவு யாருக்கு சொந்தம்.??
உணர்வு உள்ளோருக்கு புரியும்..

பள்ளியில் ஒற்றுமை ஓங்கிட
சிறுவனை ஓங்கி அடித்த
மாணவனுக்கே உணவை கொடுக்க
சொன்னதாம் பள்ளி நிர்வாகம்..

உணவிழந்து அழும் பிள்ளைக்கு
ஐந்து குச்சி மிட்டாயை தந்தாராம்
அந்த பள்ளியின் முதல்வர்...

வலிமை உள்ளவன் சொன்னது
தான் சட்டமாம்?ஆக்ராவின் உலக
அதிசயம் அடுத்த திட்டமாம்...

எய்தவனை விட்டுவிட்டு ,சட்டம்
படித்த ஐந்து அம்புகள் மீது 
நமக்கெதற்கு வன்மம்..

அம்புகள் தைத்ததால் வந்த ரணம் 
அதனால் எழுந்த சினம்...
ஆறட்டும்..அடங்கட்டும்..

மதத்தால் இஸ்லாமியன்
தேசத்தால் நாம் இந்தியன்
என்ற உணர்வோடு வலியை
மறப்போம்..சம தர்ம சமுதாய 
ஒற்றுமைக்கு  வழி அமைப்போம்..

No comments:

Post a Comment