மீண்டு வா சுர்ஜித்...
~~~~~~~~
தீபாவளி அன்று பட்டாசுகள்
மௌனம் காத்தன,பலகாரங்கள்
இனிக்க மறைந்தன,பெட்டிகளில்
புத்தாடைகள் தஞ்சம் புகுந்தன..
எத்தனை எந்திரங்கள்,எத்தனை தந்திரங்கள்.அத்தனையும்
உனை மீட்க தானே..உச்சி முகந்து உனை
உனை மீட்க தானே..உச்சி முகந்து உனை
அணைக்க தானே குழந்தாய்..
நாடாளும் நம் மந்திரிகளை
பாதாளத்தில் இருந்து கொண்டு
ஆடவைத்து, ஓடவைத்து நீ
ரசித்தது போதும்..வந்துவிடு..
தமிழகமே உன்னை தத்தெடுக்க
விழைகிறது..எம் கண்கள் எல்லாம்
உன்னை நினைத்து நனைகிறது..
வந்துவிடு..பட்டாசுக்களும்
பலகாரங்களும்,புத்தாடைகளும்
காத்திருக்கின்றன எங்களோடு
நீ வரும் நாளே தீபாவளி!
நீ வரும் நாளே பொங்கல்!
நீ வரும் நாளே கிறிஸ்துமஸ்!
நீ வரும் நாளே பெருநாள்!
நீ வரும் நாளே எங்கள் திருநாள்!
No comments:
Post a Comment