ஒளி ஏற்றி நெறி படுத்துவது கல்வி!
அந்த கல்வி தரும் பள்ளியும்,அறிவு
போதித்த ஆசான்களும் நம் நெஞ்சில்
என்றென்றும் நிலைத்து நிற்பதேன்??
தன்னை விதையாய்ஏற்று,காத்து
ஊட்டம் கொடுத்து விருச்சமாய் வளர
ஊக்கம் தந்த மண்ணுக்கு அந்த மரம்
பூக்களை தூவி நன்றி சொல்வதில்லையா ??
கற்றறிந்த மாந்தர்,தன்னை விதைத்து
உயிர்பித்த பள்ளியை,ஊக்கம் தந்த ஆசிரிய
பெருமக்களை வாஞ்சையாய் நினைவு கூர்ந்து
நன்றி பாராட்டுவது நெஞ்சத்து இயல்பு தானே!!
நமக்கு ஏற்றம் தந்த மன்ப உல் உலா பள்ளிக்கு
பவள விழா என்ற போது துள்ளி திரண்ட
முன்னாள் மாணவர்கள் ஒரு அணியில்
கைகோர்த்து நிற்பதும் அதற்கு தானோ ?
ஆரோக்கியமாய்,அக்கறையாய் வினவுகள்
எழுப்பும் அன்பர்களையும் அரவணைத்து
பள்ளியின் வளர்ச்சிக்கு வேண்டி ஒன்றிணைவோம்!!
ஒற்றுமை, கூட்டுமுயற்சி என்றும் பலமாம்!!
No comments:
Post a Comment