மழைக்கால மேகம்..
குளிர்கால பனி..
தென்றலின் தீண்டல்..
இதை விரும்பாதவர்கள்
கூட நம் ஊரில் உண்டு..
ஏன் வானவில்லின் வர்ண
ஜாலத்தை ரசிக்காதவனும்
முகத்தில் முத்தமிடும் மழைச்
சாரலை வெறுப்பவனும் உண்டு..
நந்தவன நிழலை,மணக்கும்
மலர்களை,துளிர்க்கும்
இலைகளை,தோகை விரிக்கும்
மயில்களை, கூவும் குயில்களை
ரசிக்க மறந்தவனும் உண்டு...
ஆனால் நம்ம ஊரு ஐந்து கறி
சோறை,ரொட்டிக்கறியை
கமகமக்கும் பிரியாணியை
வெறுத்தவரும்,வேண்டாம்
என்று மறுத்தவரும் இல்லை..
நம்ம பண்டாரிமார்களின்
நளபாகம்..அறுசுவை
விரும்பிகளுக்கு அது
நல்ல யோகம்..
No comments:
Post a Comment