Wednesday, 28 August 2019

உள்ளத்தில் நிரந்தரமாய் குடி இருப்பவர்




உள்ளத்தில்  நிரந்தரமாய் குடி
இருக்கும் எங்கள் துரோணரை
அவர் இல்லத்தில் சந்தித்தோம்..

எங்களது குருநாதர் ஒரு முறை 
சொன்னால்,அது எங்களுக்கு
(MR) நூர் முறை சொன்னதாய் 
அர்த்தம் கொள்வோம்..

அன்பால்,அறிவால் ஈர்த்தவர்
யாஸீன் சாரோடு  எங்களை  வார்த்தவர்.
அன்று இருந்த அதே புத்துணர்ச்சி,
முகமலர்ச்சியோடு
ஆரத்தழுவி வரவேற்றார்..

அன்று கால்பந்தாட்டத்தில் ஓடி 
ஆடிய எங்கள்  கால்கள் இன்று
ஓய்ந்து  போனாலும்,ஆருயிர்
அண்ணன் நூர் அவர்களோடு
பழகிய அந்நாட்களின் மாய்ந்து 
போகா நினைவுகளை ஆய்ந்து 
பார்க்கும் போது, எங்கள் சந்தோசம்
என்றும் தேய்ந்து போவதில்லை..

No comments:

Post a Comment