எனது அருமை அண்ணன் சயிரத்தர்
சபீர் & ஜரீனா தம்பதியினரின் அன்பு
மகளாருக்கு,திருமண வாழ்த்துக்கள்.!!
திருமண நாள் : 21.08.2019
***********
அன்பு மகள் தஸ்ஃபீக்காவே! இது
நாள் வரை 'நீ ' நீயாய் இருந்தாய்.இனி
'நீ' நீங்களாய் மாறும் நாள் இது
'நான்' என்ற உன் நிலை மாறி,இனி
ஹம்தானுடன் 'நாம்' என்று உன் மனம் மாறி,
வாழ்வின் வசந்ததை நோக்கி,
நீ பயணிக்க தொடங்கும் தருணமிது..
வாழ்வின் வசந்ததை நோக்கி,
நீ பயணிக்க தொடங்கும் தருணமிது..
குழந்தையாய் மடியில் தவழ்ந்தவளை
விரல் பிடித்து நடந்தவளை,மணக்
கோலத்தில் கண்ட போது,உன்
தந்தை சபீரும், தாய் ஜரீனம்மாவும்
அடைந்த ஆனந்தம்..அதுவே குற்றால
அருவியாய் அவர்கள் கண்களில்..
உண்மையில் பெண்மையானது
தன்னை மெய்பித்து,புதுப்பித்து
பூரிக்கும் நாள் எதுவென்றால்
அது திருமண நாள் தானே..
இந்த நன்னாளில்,அன்பால்,
அறிவால்,பண்பால்,பணிவால்,
புகுந்த வீட்டை,என்பால் ஈர்ப்பேன்
என்ற உறுதி மொழியை,திடமாய்
உன் உள்ளத்தில் ஏற்றிடு..
கணவனிடம் உன் காதலை
அனுதினமும் காட்டிடு,எல்லாம்
வல்ல ரஹ்மானை எக்கணமும்
போற்றிடு,ஐவேளையும் அவனை
நினைத்தழுது தொழுதிடு..
மகளே!,எளிமையாய் இருந்திடு..
இனிமையாய் பழகிடு,உறவினை
வளர்த்திடு,ஊரார் வியந்திட
வளர்த்திடு,ஊரார் வியந்திட
என்றும் ஆனந்தமாய் வாழ்ந்திடு..
ஹம்தானும் நீயும்,பார் போற்றும்
உதாரண தம்பதியராய்,சீரோடும்
சிறப்போடும்,வளமோடும் வனப்போடும்
பல்லாண்டுகள் வாழ, இறைவனிடம்
கையேந்தி பிரார்த்திக்கின்றேன்..
No comments:
Post a Comment