Tuesday, 6 August 2019

மேகத்தின் கண்ணீர்





வீட்டு தளவாடங்கள் 
காகிதங்கள்,விறகிற்கு
கட்டுமான பொருளுக்கு  
மரங்களை வெட்டினோம்..

சாலைகள் அமைத்திட 
சோலைகளை அழித்தோம்
நாளைய தலைமுறையை
முற்றிலும் நாம் மறந்தோம்.. 

காசுக்கு வேண்டி,பயிர்
நிலங்களை துறந்தோம் 
விற்பனைக்கு அதனை 
ஆசையாய் அளந்தோம்..

நீர் நிலைகளை அழித்து
காங்கிரீட் காடுகளை
நகரம் என்ற பெயரில் 
ஆர்வமாய் அமைத்தோம்..

இன்றோ மழை இன்றி
வறண்ட பூமியில்,மருண்ட 
நிலையில்,நிழல் இன்றி 
பரிதவித்து நிற்கின்றோம்.

இரக்கம் கொண்ட மேகம் 
நம்மை நினைத்து கண்ணீர் 
வடிக்கிறது.அதுவே மழையாய்
சில சமயம் பொழிகிறது..

மேகத்தின் கண்ணீர் ஒருநாள்
வறண்டால் நம் நிலை என்ன?
இயற்கையை பழித்தது போதும்.
இன்றே விழித்து கொள்வோம்.

No comments:

Post a Comment