நீரின்றி அமையாது உலகு..
~~~~~~~
இது கோடைக்கான பதிவு
மட்டுமல்ல,இறைவனின்
கொடையான நீருக்கான பதிவு.
நீரின்றி அமையாது உலகு..
வானம் பார்த்த பூமியில்
தண்ணீர் இன்றி, கண்ணீர்
வடிக்கும் மக்களை கண்டால்
செந்நீர் வடிக்காதோ விழிகள்..
முன்னோர் செய்த நற்கருமம்
பாக்யமாய் நமக்கு நீர்நிலைகள்
நிரப்பமாய் இருந்தது,இன்று
நிலத்தடி நீர் அதலபாதாளத்தில்..
நீரின் அவசியம் புரிந்தவன்
அதன் கிரயம் அறிந்தவன்
யாருமில்லை,அதை விரயம்
செய்பவனே பூமியில் உண்டு
என்பதை படைத்தவன் அறிவான்.
அதனால் நீரினை பன்முகமாய்
கடல்,மழை,பனி,அருவி,நதி,ஏரி,
வாய்க்கால்,குளம்,கிணறு என்று
நற்கொடையாய் நமக்கு தந்தான்...
உதாசீனம் செய்தோம்,கைசேதம்
அடைந்தோம்.தவித்த வாய்க்கு
தண்ணீரை விலை கொடுத்து
வாங்கும் நிலையில் இன்று
தவித்து போய் நிற்கின்றோம்
சிக்கனமாய் பணத்தை, செலவு
செய்ய பெற்ற பிள்ளைக்கு
சொல்லி தந்த நாம்,அள்ளி
இறைத்து தண்ணீரை விரயம்
செய்தல் பாவம் என்பதை
சொல்லித்தர மறந்தோம்..
நம் சுயநலத்தால் காற்றையும்
நிலத்தையும்,நீர்நிலைகளையும்
மாசுபடுத்தினோம்.நாசம் செய்த
இயற்கை வளங்களை மீட்க,இனி
அதனோடு நேசம் கொள்வோம்
மழைநீரை சேமிப்போம்..
மரம் வளர்ப்போம்..
மனிதவளம் காப்போம்...
No comments:
Post a Comment