Wednesday, 10 April 2019

உடன்பிறந்தோர் தினம்...

HAPPY  SIBLINGS DAY (APRIL 10TH)
உடன்பிறந்தோர் தினம்...
~~~~~~~~~
பெற்றவள் பெற்றது நாலு 
முன்னால் பிறந்தது அக்கா
அண்ணன் என ரெண்டு.. 

அறுபதை நெருங்கும் எனக்கு 
அன்பதை அள்ளித்தரும் தேவதை
என் அக்கா.அம்மாவின் மறைவுக்கு
பின் என் அன்னையானாள்..
நான் அவள் பிள்ளையானேன்

பொறுமையின் சிகரம் என்
அண்ணன்.நேர்பட பேசும் 
வேசமில்லா பாசக்காரன்.. 
கண்ணியம் காப்பதில்
என்னையும் பயில்வித்தவன்.

ஒன்றும் அறியா இளம் கன்று
என் தங்கை.அண்ணன் என்ற
உறவிற்கு என்னை தகுதி அடைய 
செய்தவள் அவளே.பெண்களை 
மதித்து போற்றிட  எளிமையான 
அவளே எனக்கு  காரணமானாள்..

இவர்களுக்கென்று நான் 
ஒன்றும் செய்ததில்லை
செய்யென்று அவர்களும் 
கேட்டதில்லை,கடன் பட்டார் 
நெஞ்சம் போல கலங்குகிறேன்.. 

இறைவா! நன்றி..நன்றி 
நிறைவாய் உடன் பிறப்புகளை
தந்தமைக்கு நன்றி.! நன்றி!

No comments:

Post a Comment