வாக்காளர்களுக்கு நன்றி.!!
மாட்டுக்கறியை நாட்டுக்குரிய
மாட்டுக்கறியை நாட்டுக்குரிய
பிரச்னையாக்கி,புரளி பரப்பி
பல அப்பாவிகளை கொன்ற,பசு
நேசர்களின் ஆதரவாளர்களுக்கும்...
மாலேகான் குண்டு வெடிப்பு
குற்றவாளி சாத்வி ப்ரக்யா
தாக்கூரை பாராளுமன்ற
வேட்பாளராய் அறிவித்து
அதிர்ச்சி தந்தவர்களுக்கும்...
நடுநிசியில் நாணயத்தை
மதிப்பிழக்க செய்து,பாமரனை
கடும்பசிக்கு ஆளாக்கி,அழகு
பார்த்த, தாமரை கட்சிக்கும்..
பாதுகாப்பு படையை கூட
தன் அரசியல் ஆதாயத்திற்கு
வெட்கமின்றி பயன்படுத்திய
விவேகமற்ற தலைவனுக்கும்..
4 ஜியை தனியாருக்கு தாரை
வார்த்துவிட்டு,BSNL ஐ
பாடையேற்ற போகும்,பண
முதலைகளின் அடிவருடிகளுக்கும்..
மாமன் மச்சான் என, ஒன்றாய்
பழகிய, ஹிந்து முஸ்லீம்களை
திரித்த பொய்யால், பிரிக்க முயலும்
ஹிந்துத்துவ வெறியர்களுக்கும்..
வருமானம் ஒன்றே போதும் என்று
தன் மானம் இழந்து, அவர்களோடு
துணை போன கட்சிகளுக்கும்..
ஆதரவளிக்காமல்...
அவர்களுக்கு
வாக்களிக்காமல்....
நாட்டின் நலனுக்காக,தகுதி
படைத்த கட்சிகளுக்கு, வாக்களித்த
வாக்காள பெருமக்களுக்கு
நன்றி..நன்றி..நன்றி...
No comments:
Post a Comment