காவிக்கு கொடி பிடிக்கும் நமதூரின் கனவான்களே..!
--------------------------------------------------------------------------
பிறைக்கொடியை அழித்து,அதை
தரைக்கடியில் புதைத்திட முயலும்
காவிகளுடன் கைகோர்த்த கட்சிக்கு
பலம் சேர்க்க உழைத்திடும் ஊரின்
தரகர்களே!மதியற்ற மறவர்களே!
நம்மை வேரறுக்க நினைக்கும்
கோடாரிக்கு கைப்பிடியாய்
நீங்கள் ஆனதெல்லாம் காசுக்கு
என்று 'நா' கூச நான் பேச வில்லை..
ஊர் உங்களை ஏசவில்லை என்று
பொய் சொல்லியும் பூசவில்லை
எதிரொலியை கேட்டிருப்பீர்..
எதிராளிகள் அல்ல,அவர்கள் உமது
தொப்புள் கொடி உறவுகள் தான்
தாமரைக்கு முட்டுக்கொடுக்க
இலைகளும்,வெம்பிய மாம்பழமும்
சப்தமில்லா முரசோடு நகர்வலம்
வருகின்றன,அது ஊரறிந்த
சந்தர்ப்ப வாத அரசியல்..
மூப்பனாரின் புதல்வர் அவரின்
தோப்பனார் இல்லாததால் வேறு
வழியின்றி காவிரிக்கரையில்
கவிதை பாடுகிறார் காவிக்கு. பாவம்
அது இயலாமை அரசியல்..
இன்று நாடு உள்ள நிலைமையில்
இஸ்லாமியனுக்கு ஏற்றமில்லை
கருவறுக்கும் கர சேவர்களின்
பேச்சிலும் மாற்றமில்லை..
அவர்களோடு மதிகெட்டு
தறிகெட்டு நீங்கள் சேர்ந்தது
எந்தவித அரசியல்? விளக்கி
எங்களுக்கு சொல்லுங்களேன்..
No comments:
Post a Comment