மகளிர் தின வாழ்த்துக்கள்..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பெண்ணே,எண்ணிக்கையில்
சமூகத்தின் பாதி நீ, மீதியை
வளப்பவள் கூட நீ தானே..நீ இன்றி இவ்வுலகில்லை,இதை சொல்ல
தயங்கும் ஆணுக்கு மதியில்லை..
சிருஷ்டிகளை படைப்பவன்
உயிர்களை தாயின் வழி தானே தந்தான்.மண்ணில் ஆண்கள் சிலர்
எங்களுக்கு வலி தானே தந்தான்
என்று போராடும் பெண்களின்
ஈர கண்களும் உண்டு..
ஆணுக்கு நிகராக சமநிலை
வேண்டி போராடும் நிலையில்
பெண்கள் உண்டென்றால் அது
இந்த சமூகத்தின் வீழ்ச்சிதானே..
பெண்கள் வாழும் உலகே
அழகானது..பெண்கள் வாழ
நினைக்கும் உலகே மகத்தானது.
மகளிர் தின வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment