வான் வழி சென்று, பகைவனை
வீழ்த்தி,தரை வழியில்,வாஹா
வந்த,சாகா வரம் பெற்ற,எங்கள்
மைந்தனே, அபிநந்தனே..
விண்ணில் உன் தாய்நாட்டின்
பெருமையை நிலைநாட்டி,அன்னிய
மண்ணில்,உன் வீரக்கம்பீரத்தை
வெளிக்காட்டி, எங்கள் நெஞ்சை
கொள்ளைக்கொண்ட மாவீரனே..
பகைவரின் பிடியில் தனித்து
நின்ற நீ, உன்னிலை அறிந்து
தடாகத்தில் தாவி,ஆதாரங்களை
நீராலும்,மென்று உன் வாயாலும்
அழிக்க முற்பட்ட வீரத்திருமகனே..
உன்னை நினைத்து இந்திய தேசம்
பெருமிதம் கொள்கிறது,தமிழ்
மண்ணோ, கர்வத்தால் தலை
நிமிர்கிறது..நம் மூவர்ணக்கொடி
போல, உன் புகழ் கொடி பறக்கட்டும்..
வாழிய வாழியவே..வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment