Tuesday, 26 February 2019

அதிக மதிப்பெண்கள்.. பிள்ளைக்கா? பெற்றோருக்கா?

அதிக மதிப்பெண்கள்..
பிள்ளைக்கா? பெற்றோருக்கா?
***********
தேர்வில் பெரும் மதிப்பெண்ணே மதிப்பென்றுச்சொல்லி,சதி வலை 
பின்னும் கல்வியாளர்கள்.சிக்கியதோ
பிள்ளைகளின் பெற்றோர்களே..

பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்பதில் போட்டி,அவர்களை தனக்கேற்ப
வார்ப்பதில் போட்டி..பந்தயத்தில்
ஓடுவது எல்லாம் பெற்றோர்களே.. 

பள்ளிச்செல்லும் பிள்ளைகளுக்கு  மத்தியில் இல்லாத பந்தயம் இது..
தினம் அவர்களை தள்ளிச்செல்லும் பெற்றோர்களின் புத்தியில் 
உண்டான பந்தயம் இது..

தான் பெற்ற பிள்ளை,எத்துறையில் 
வல்லவனாய் வருமென,ஆய்ந்தறிந்து அத்துறையில் பயணிக்க,வழிகாட்டும்
தாய் தந்தையர்களே,என்றும் நமது
மதிப்பிற்கு உரியவர்கள்.

அதிக மதிப்பெண்களை 
அவர்களுக்கே தந்திடுவோம்..


No comments:

Post a Comment