உலக தாய்மொழி நாள் - பிப்ரவரி 21
**************
அவரவர்க்கு அவர் மொழியே உயிர்
அதை மறந்தவர் வாழ்வெல்லாம்
துயர்.இதை சரித்திரம் சொல்கிறது..
மற்றவர் மொழி மேல் பழி சொல்லி
நதிநீரை தர மறுத்த நாடுண்டு
அதனால் நீரில்லா நிலமுண்டு
சோரில்லா நிலையுண்டு,இந்நிலை
கண்டு நடுங்காத மனமுண்டோ?
அவரவர் மண்ணில் அவர் மொழி
நிலைக்கட்டும்,சிறக்கட்டும் என்ற
மனம் இருந்தால்,பூ மணக்கும்
பூங்காவாய்,பூவுலகம் மாறிடுமே...
தாய்மொழி தின வாழ்த்துக்கள்..
No comments:
Post a Comment