"ஏழைச்சொல் அம்பலம் ஏறாது"
என்பது பழமொழியாம்.அதனை
பொருளற்ற ஒரு வறியவனின்
சொல்லெனக்கொள்ளாமல்
பொருளில்லா வெற்றுச்சொல்
அம்பலம் ஏறாது என்று பொருள்
கொள்வதே புதுமொழியாம்..
பணமில்லா ஏழ்மையை ஒரு
குறையாய் கண்டு,அவர்களை
குறைவாய் மதிக்கும் மனிதன்
தான் குணமில்லா ஏழை...
பொருள் பெற்றவன் எல்லாம்
புத்தனும் இல்லை,இல்லாதவன்
எல்லாம் எத்தனும் இல்லை.
அல்லாஹ்வின் அருள் பெற்றவன்
தான் செல்வந்தன்.அவனே
சொல்வேந்தன்.அவன் சொல்
என்றும் அம்பலம் ஏறும்...
No comments:
Post a Comment