Monday, 31 December 2018

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!!


உறுதிமொழிகள் சிலவற்றை 
மனதிலே ஏந்தி ,குதூகுலமாய் 
புத்தாண்டை தொடங்கிடுவோம்.. 

மாசில்லா பூமியை,வருங்கால  
தலைமுறைக்கு தந்திடவும்,நெகிழி
(பிளாஸ்டிக்)பையை ஒழித்து
சுற்று சூழல் காத்திடவும்..

நிம்மதி நிலை பெற,மமதை
இன்றி,மனமதை  காத்திடவும்..
துயரங்களுக்கு,தடைகளுக்கு 
விடை கொடுத்திடவும்.. 

குனிந்திரு, என்றும் பணிந்திரு
என்று நிர்பந்தித்தவர் தடுமாற 
நம் தடம் மாற்றி,நிமிர்ந்திடவும் 
தன்னம்பிக்கை துளிர்த்திடவும் 

கொடுமையை கண்டால்
வினவிடவும்,உறவுகளை 
விரும்பிடவும்,வறியவர்க்கு 
விருந்திடவும்,அவர்தம் 
மனவலிக்கு மருந்திடவும் 

மாற்று மத சகோதரர்களின் 
கருத்துரிமையை போற்றிடவும்
நம் சுதந்திரத்தை என்றும் 
நிலை நாட்டிடவும்,மனதிலே 
உறுதி ஏற்போம்.!!
  
இப்புத்தாண்டு இன்னல் 
இல்லா,இனிய ஆண்டாய் 
அனைவருக்கும் அமையட்டும்


No comments:

Post a Comment