தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்...
**********
'அ'கம்பாவம் ஒழித்து
'ஆ'ற்றலை வளர்த்து
'இ'யற்கையை போற்றி
'ஈ'கை மனத்தோடு
'உ'ண்மையை பேணி
'ஊ'க்க உணர்வோடு
'எ'ண்ணங்களை உயர்த்தி
'ஏ'ற்ற தாழ்வை மனதில் அகற்றி
'ஐ'ம்புலன்களை அடக்கி
'ஒ'ருவனே தெய்வம் என்பதை
'ஓ'ங்க ஊரெங்கும் சொல்லி
வாழ்பவனுக்கு,ஆயுத
(ஃ எழுத்து) கருவிகள் எதற்கு???
உயிர் எழுத்தின் சொல்படி
நீ நடந்து மெய்ப்பித்தால்
மெய் எழுத்தும் உடன் வந்து
உன் தலை எழுத்தை மாற்றிடுமே..
வாழ்ந்திட நல் வழி வேண்டும்...
உணர்வோடு,உயிர்ப்போடு
வாழ்ந்திட ,தாய் மொழி வேண்டும்..
பல மொழிகளை கற்பது,உன்
விழிகளை விசாலமாக்கும்
ஆனால் நீ சிந்திப்பது என்றும்
தாய் மொழியில் தானே..
நீ தமிழனா? இல்லை பிறமொழி
மோகம் கொண்ட tamilanaa..
மோகம் என்பது முப்பது நாட்கள்
தானே,தாகம் தீர்ந்திட,தமிழ்
அமுது பருகிட, வந்துவிடு தோழா.!
அந்தத் தமிழ் இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்...
**********
'அ'கம்பாவம் ஒழித்து
'ஆ'ற்றலை வளர்த்து
'இ'யற்கையை போற்றி
'ஈ'கை மனத்தோடு
'உ'ண்மையை பேணி
'ஊ'க்க உணர்வோடு
'எ'ண்ணங்களை உயர்த்தி
'ஏ'ற்ற தாழ்வை மனதில் அகற்றி
'ஐ'ம்புலன்களை அடக்கி
'ஒ'ருவனே தெய்வம் என்பதை
'ஓ'ங்க ஊரெங்கும் சொல்லி
வாழ்பவனுக்கு,ஆயுத
(ஃ எழுத்து) கருவிகள் எதற்கு???
உயிர் எழுத்தின் சொல்படி
நீ நடந்து மெய்ப்பித்தால்
மெய் எழுத்தும் உடன் வந்து
உன் தலை எழுத்தை மாற்றிடுமே..
வாழ்ந்திட நல் வழி வேண்டும்...
உணர்வோடு,உயிர்ப்போடு
வாழ்ந்திட ,தாய் மொழி வேண்டும்..
பல மொழிகளை கற்பது,உன்
விழிகளை விசாலமாக்கும்
ஆனால் நீ சிந்திப்பது என்றும்
தாய் மொழியில் தானே..
நீ தமிழனா? இல்லை பிறமொழி
மோகம் கொண்ட tamilanaa..
மோகம் என்பது முப்பது நாட்கள்
தானே,தாகம் தீர்ந்திட,தமிழ்
அமுது பருகிட, வந்துவிடு தோழா.!
No comments:
Post a Comment