தேகத்தின் மோகம் கடந்து
போனது,ஆசைகள் மறந்து
போனது,புலன்கள் கூட
இன்று அடங்கி போனது..
வாழ்க்கை ஓட்டத்தில் நான்
களைத்தாலும்,நரைத்தாலும்
உன் மேலுள்ள பரிவு,என்
பிரிவு வரை தொடருமடி..
முதுமை என்பது நோயல்ல
உன் பிள்ளைகளுக்கு நீ
கடமை மறந்த தாயல்ல...
பிள்ளைகளை தூக்கி வளர்த்த
நம்மை, அவர்கள் தூக்கி எறிந்த
கொடுமையை யாரிடம் சொல்ல?
மற்றவருக்காய் வாழ்ந்தது
போதும்,இனி உனக்கென நான்
எனக்கென நீ என வாழ்ந்திடுவோம்.
சொந்தமும் வேண்டாம்,இனி
ஒரு பந்தமும் வேண்டாம்
அந்தம் வரை நீ தான் எனக்கு
நான் தான் உனக்கு,மரணத்தால்
கூட நம்மை பிரிக்க முடியாது...
சேர்ந்த மரிப்போம்..உலகை
இணைந்தே துறப்போம்...
No comments:
Post a Comment