கரணம் தப்பினால் மரணம்
இரும்பிலும்,துரும்பிலும்
வெயிலிலும், மழையிலிலும்
நின்று உழைத்து,மின்சக்தி
கொண்டுவர பாடுபட்ட
மின்சார துறை ஊழியர்களுக்கு
கோடானுகோடி நன்றி.
*************
கஜா தந்த பாடம்..!!
மின்சாரம் இல்லா நாட்களில்
முட்டை விளக்கு,மிளகுவர்திகள்
எரிந்து,நிகழ்காலத்தை மட்டுமல்ல
எதிர்காலத்தையும் காட்டியது..
இடையூறாய் நினைத்து
அடிப்பைப்பை எடுத்தவர்
எல்லாம்,குடிநீரின்றி
திண்டாடித்தான் போனார்கள்..
செல்போன்கள் செயலிழக்க
செல்லரிக்க விட்ட லேண்ட்
லைன் தான் தொட்ட போது
ஓடோடி நம் உதவிக்கு வந்தது
இளசுகள் பொறுமை இழந்த
போது,பெருசுகள் கதை
சொல்லி,கைவிசிறியால்
வீசி ஆசுவாசம் செய்தனர்..
மின்சக்தி இல்லாதபோது,நம்
சக்தியை இழந்து,பழமையின்
பெருமையை உணர்ந்தோம்..
பழமையை போற்றுவோம்
பெரியவர்களை,நமக்கு
உரியவர்களாய் எண்ணி
ஆறுதலாய் அரவணைப்போம்
No comments:
Post a Comment