Sunday, 18 November 2018

கூத்தாநல்லூரின் இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களே... நன்றி,நன்றி,நன்றி..!!

கூத்தாநல்லூரின் இயக்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்களே...
நன்றி,நன்றி,நன்றி..!!
~~~~~
கோரப்புயல் நம் ஊரை   
சூறையாடிய இரவில் கூட
உயிரை துச்சமென மதித்து
அச்சமின்றி உழைத்திட்ட 
தன்னார்வ தொண்டர்களே.!
ஆருயிர் தோழர்களே..!!

ஊனின்றி, உறக்கமின்றி,நம்
ஊர்நலனே,உம் நலனென்று 
நீவிர் சுற்றி சுழன்ற வேகத்தில் 
கஜா புயல் வெக்கித்து,விக்கித்து 
நம் ஊரை விட்டே ஓடிவிட்டது..

தன் புஜபலத்தால்,கட்டற்று கஜா 
செய்த சேதங்களை,சேர்ந்து நின்று
சோர்ந்திடாமல், நிஜபலத்தால்
சீரமைத்து, நமதூரை செப்பனிட்ட செம்மல்களே...உங்களை 
உளமார வாழ்த்துகிறோம்!
மனதார போற்றுகிறோம்..!

அனைவருமே களத்தில்...யாரை 
குறிப்பிட்டு சொல்வது?இயக்கங்கள்
அனைத்தும்,தயக்கமின்றி உழைத்த
நிகழ்வில்,திளைத்தோம் மகிழ்வில்..

இத்தினத்தில் இருந்து,நீர் எல்லோரும்
ஊர் மக்களின் இதயத்தில் ,வாடகை 
இன்றி,நிரந்தரமாய் குடியேறிவிட்டீர்..

ஊரின் அரனாய் நின்ற உங்களை
எம் உறவாய் நாங்கள் பெற்றதே,
எங்கள் வரமாய் உணர்ந்தோம்..

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் 
அருள் உங்களுக்கும்  உங்கள் குடும்பத்தார்களுக்கும் என்றும்
உரித்தாகட்டும்...ஆமீன்..!!

No comments:

Post a Comment