யார் பெற்ற பிள்ளையோ
அனாதையாய்,சென்னையில் முடியாமல் கிடக்கிறதாம்..
நம் ஊரை சேர்ந்தவராய்
இருக்கலாம் என்ற யுகங்கள்
வாட்ஸப்பில் உலா வந்தன..
இதை ஒரு தகவலாய் படித்த
நாம்,அடுத்த நம் வேலையின்
நிமித்தம்,மறந்து போனோம்..
இச்செய்தியை கடந்து போக
மனமில்லாமல்,சில நல்ல
இதயங்கள் வேகமாய் துடித்தன..
அத்துடிப்பினால்,ஒரு மனித மரணம்,இன்று கௌரமாய் இறைவனிடம் அனுப்பப்பட்டது..
ஆம்,உரிமை கோரப்படாத,நம்
ஊரை சேர்ந்த,அன்சாரி என்பவரின்
உடல் ,ராயப்பேட்டையில் ,
நல் அடக்கம் செய்ய பட்டது..
நல் அடக்கம் செய்ய பட்டது..
அதற்கு காரணமான,துடிப்பான இதயத்தை பெற்ற ,அஸ்ஃபர்
மற்றும் ராசிக்கை வாழ்த்துவதோடு,
அவர்களை வழி நடத்தும்,அன்பு
தம்பி நஜுமுதீனை, உளமார, மனமார,பாராட்டுகிறேன்..
வாலிபாலில் பின்னின்று
ஆடி ''அண்டர்ஆர்ம் ஹாஜா''
என்று பெயரெடுத்தாய்..அது
தற்காப்பு(Defence) ஆட்டம்..
சமுதாய சேவையில்,உன்னை
முன்னிலை படுத்தாமல், நீ
பின்னின்று ஆடுகிறாய்.அது
தற்புகழ்ச்சி இல்லா ஆட்டம்..
எத்துறையில் நீ ஆடினாலும்
அலட்டாமல் ஆடுகிறாய்..உன்
முகத்தை காட்டாமல் ஆடுகிறாய்
சிலிங்கி அபுல்ஹசன் மகன்
ஜனாஸாவை,ஜிஹெச்சில்(GH )
இருந்து மீட்டு,ராயப்பேட்டையில்
அடக்கும் வரை நீ ஆடிய ஆட்டம்
அடக்கமான ஆட்டம்..பலரும்
அறியாத ஆட்டம்...
தோணாயினா ஹாஜாவே..
சென்னையில் உள்ள உன்னை
ஆரத்தழுவ இயலவில்லை..
மன்னித்து விடு என்னை..
வாழிய ! வாழியவே !-
வாழிய ! வாழியவே !
வாழ்த்துகிறேன் மனதார..
No comments:
Post a Comment