எத்தனை முயற்சி,அத்துணை
முயற்சியிலும்,தோற்றுப்போய்
துவண்டு போனான் காலன்..
சமரச பேச்சு காவிரியில்..
கலங்கிய காலனை கண்ட
முத்தமிழறிஞர்,அவனை
அழைத்து விபரம் கேட்க..
இது இயற்கைக்கு எதிராய்
போய்விடுமோ?என்ற தன்
அச்சத்தை அவன் சொல்லி
கலைஞரிடம் அழுதிட..
இரக்கப்பட்ட தலைவன், இரந்து
நின்ற காலனின் அழைப்பை ஏற்று,
இறந்து போக, நிபந்தனையோடு
ஒத்துக்கொண்டாராம்..
உலகம் உள்ளவரை தமிழ் வாழ
வேண்டும் என்று அவர் கேட்க,
தமிழோடு, உன் பெயரும்
நிலைத்து வாழும் என்றானாம்..
காலனும் ஓரு வேண்டுகோள்
வைத்தானாம்..
கோடான கோடி நெஞ்சங்களில்
வாழும் உன்னை, மரணிக்க
அழைத்த என்னை, மன்னிக்க
வேண்டும் என்றானாம்..
அண்ணாவும்,பெரியாரும்
இருக்கும் இடத்திற்கு, வழி
காட்டும் உன்னை,நான்
மன்னித்தேன் என்றவர்,தமிழ்
கூறும் நல்லுலகமும் உன்னை
மன்னிக்கட்டும் என்றாராம்...
அவராத்தர் சிராஜ்...
ஈரோட்டை தந்தையாய்,
காஞ்சியை தமயனாய்,
திராவிடத்தை உதிரமாய்
தமிழை உன் உயிராய்
எங்களை உடன் பிறப்பாய்
உன் இதயத்தில் ஏற்றவனே!
நெஞ்சில் *நூலை* அணிந்த,ஆதிக்க
வர்க்கத்தினர் முன்னே,கைக்கட்டி,
கூனி,குறுகிப்போன தமிழனை,
நிமிர்ந்து நிற்கச்சொல்லி,இனமான
உணர்வை ஊட்டியவனே!!
ஆரிய மரங்களை அறுக்க
வந்த கொடுவாளே!உனக்கும்
கூட நூலை நிச்சயம் பிடிக்கும்.
எத்தனையோ ஆயிரம் நூல்களை
படித்திருப்பாய்,தலையில் வைத்து
படுத்திருப்பாய்,பல அறிய,பெரிய
நூல்களை படைத்தவன் நீ..
அதனால் தான் ஒரு*நூலால்*
கட்டுண்டு போனாயோ?
தமிழகமெங்கும் சக்கரமாய்
சுழன்ற உன் கால்களை,முற்று
பெறாத இரவில்,ஒரு நூலால்
கட்டியதை கண்ட போது,எங்கள்
கண்கள் பணித்தது அய்யா...
ஓய்வெடுக்க சென்ற சூரியனே!
இன்றாவது கவலையின்றி நீ
உறங்கு.உன் கால் தடங்களை
பின் தொடர்ந்து,உன் கனவினை
நிறைவேற்றிட,தொண்டர்கள்
பலக்கோடி இங்குண்டு...
No comments:
Post a Comment