பள்ளியை நிர்வகிப்பவர்களை,
தம் பள்ளியறை பிரச்சனைகளை,
சீராக்கிட கேட்டு, வரிசையில்
அணுகி நிற்கும், தம்பதிகள்
பலரை, நமதூரில் கண்டேன்..
நம் துவாக்களை வேண்டி..
அழைத்து நம்மை ,விருந்து
படைத்து,ஒன்றாய், நன்றாய்
சேர்ந்த தம்பதிகள், பிரிந்தால்
நம் உள்ளம் வலிக்கிறது...
என்னுயிரில் பாதி உனக்கு,மீதி
எனக்கு என்று சூளுரைத்து,
திருமணத்தன்று கைப்பிடித்த
தம்பதிகள், மனம் மாறி இன்று
திசை மாற நினைப்பதேனோ?
கணவன் மனைவி பிணக்கு
அது யார் போட்ட கணக்கு?
வல்ல இறைவன் விதித்ததா?
இல்லை நமக்கு நாமே வகுத்ததா?
நீயா-நானா பட்டிமன்றம், அதை
ரசிக்கலாம் தொலைக்காட்சியில்..
குடும்ப உறவில் நடந்தால் அது
என்றும் தொல்லைக்காட்சி....
உங்களுக்கு பசித்த போது சுவைத்த
உணவு(உடம்பு),வயிறு நிறைந்த
போது திகட்டி விட்டதா? இல்லை
திரண்டு விட்ட காசுப் பணம் தான்
உங்களை புரட்டி விட்டதா?
உடலை நான்கு சுவற்றிற்குள்
சுயமாய்,சுகமாய்,பகிர தெரிந்த
உங்களுக்கு,ஊடலை பேசி தீர்க்க
தெரியாமல் போனது ஏனோ?..
பிரிந்திட துடிக்கும்,தம்பதிகள்
சிலருக்கு,பிள்ளைகளும் உண்டு..
அந்த மொட்டுக்கள், மலரும்
நிலையில் ,உங்கள் பிரிவு என்ற
சூறாவளியை தாங்கிடுமா??
இச்சையால் பிறந்த உங்கள்
பிஞ்சு செய்த பாவம் தான் என்ன?
அதன் நெஞ்சு வெடிக்க,பிரிந்து
நீங்கள், சாதிக்க போவேதென்ன?
ஊர் துணையும்,யார் துணையும்
வேண்டாம்,ஆணவம்(ஈகோ)
இன்றி,பேசுங்கள் மனம் திறந்து.
நீதியாய் நேர்மையாய் பேசினால்
பிரச்சனைகள் ஓடிவிடும் தூரமாய்..
கோபங்களும், தாபங்களும்
வாழ்வின் சாபங்கள்.மறப்போம்
மன்னிப்போம் என்ற குணமே
வாழ்வில் ஒளியேற்றும் தீபங்கள்..
யாருடைய வாழ்வில் சோகங்கள்
இல்லை,கருமேகங்கள் சூரியனை
சூழ்ந்தால், உலகம் இருண்டிடுமா?
குளிர்விக்க மழைத்தான் வரும் என
நம்புங்கள்,நம்புங்கள்,நம்புங்கள்...
தொடங்குங்கள் வாழ்க்கையை
மீண்டும்,நீங்கள் நலமாய்,வளமாய்
வாழ,சொந்தங்களும்,பந்தங்களும்
வாழ்த்தி என்றும் துணை நிற்கும்...
No comments:
Post a Comment